முகப்பு
திருச்சி

மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைப்பது ஏற்புடையதல்ல

தமிழகத்தில் மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:56 am IST
பகிர்:

தமிழகத்தில் மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 1979 - 80 ஆண்டுகளில் கடும் பனிக்காலத்தில் கூட நாடு முழுவதிலும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் மழை குறித்த வானிலை மையத்தின் அறிவிப்பை காரணம் காட்டி இடைத்தேர்தல் நடத்தவில்லை என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. அதேசமயம், ரெட் அலர்ட் அறிவிப்பு அதிமுகவின் சூழ்ச்சி என்று சொல்ல முடியாது. வானிலை ஆய்வு மைய அறிவிப்புக்கும், தமிழக அரசுக்கும்  தொடர்பில்லை. தேர்தல் ஆணையத்துக்கென பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளி வைத்ததற்கான காரணம் தான் ஏற்புடையதாக இல்லை.  பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எந்தவொரு ஆளுநரும் சொல்லாத ஒரு குற்றச்சாட்டை தற்போதைய ஆளுநர் கூறியிருப்பது இதுதான் முதல் முறை.
தகுந்த விசாரணை நடத்தி அதற்கு காரணமான அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.