முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர ஓராண்டு நிறைவு விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் காவிரி மகா புஷ்கர விழாவின் ஓராண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:45 AM
பகிர்:

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் காவிரி மகா புஷ்கர விழாவின் ஓராண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கடந்த 2017 செப்.12ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் சஞ்சாரமானார்.  
இந்த ராசிக்குரிய நதியான காவிரி நதியில் மகா புஷ்கர விழா  கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஓராண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.21) முதல் புதன்கிழமை (அக்.24) வரை நடைபெற உள்ளது. 
முதல்நாளான, ஞாயிற்றுக்கிழமை காலை மண்ணச்சநல்லூர் அருகே கோபுரபட்டியிலிருந்து கல்யாண உற்ஸவர் சிலை, ஆதிநாயக பெருமாள் தாயாருடன் 
ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக அம்மாமண்டபம் காவிரியாற்று பகுதியில் மாமுண்டி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தை அடைந்தது. 
அங்கு கோ பூஜை, விஷ்வக் சேனயாகம், காவிரி மஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது. இதன்பின் மாலை காவிரிக்கு மங்கல ஆரத்தி, திருவிளக்குபூஜை நடைபெற்றது.
அதேபோல, புதன்கிழமை வரை காவிரிக்கு மங்கள ஆரத்தி, மகான்களின் அருளாசி, பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.