திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் ஒன்றியத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ், சுற்றுப்புறங்களிலுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டாலும், இக்கிராமத்துக்கு போதிய அளவில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள்,  கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான நீரேற்றும் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை  பூட்டி, காட்டுப்புத்தூர்- மாயனூர் சாலையில் ஸ்ரீராமசமுத்திரம் பேருந்து நிறுத்தப் பகுதியில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த  காட்டுப்புத்தூர் போலீஸார், வருவாய்த்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் போதியளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT