திருச்சி

வையம்பட்டி அருகே ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

DIN

வையம்பட்டி அருகிலுள்ள மட்டப்பாறைப்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன்  திருக்கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.
இக்கோயில் முன்பு இருந்த வணிக ரீதியிலான கடைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு மாற்று இடம் அளிக்கப்பட்டது.  ஆனாலும், சில கடைகளின் உரிமையாளர்கள் மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
அளிக்கப்பட்டும்  யாரும் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றிக் கொள்ளவில்லை.  இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் ராணி தலைமையில், செயல் அலுவலர்கள் பிரபாகரன், ரவிச்சந்திரன், ராமநாதன், ஜெய்கிஷன், ஆய்வாளர்கள் உதயகுமார், பிரேமலதா, பரந்தாமன்  முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி  திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இரு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT