முகப்பு
திருச்சி

லாரி மோதி வடமாநில தொழிலாளி சாவு

லால்குடி அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்த  வடமாநில இளைஞர் மீது லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:56 am IST
பகிர்:

லால்குடி அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்த  வடமாநில இளைஞர் மீது லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 
லால்குடி  அருகே பூவாளூர் முதல் புள்ளம்பாடி வரை  சாலை அமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம்,  உர்சுலா பகுதியைச் சேர்ந்த சந்திரதேவ்ராம் மகன் பூலோராம் (38) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனராம். இந்நிலையில், சாலைப் பணி அளிக்கும் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி பூலோராம் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து, நிறுவன அலுவலக உதவியாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.