திருச்சி

துறையூரில் விழிப்புணர்வுப் பேரணி

துறையூர் வருவாய் துறை சார்பில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு  மிதிவண்டி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

துறையூர் வருவாய் துறை சார்பில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு  மிதிவண்டி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
துறையூர் வட்டாட்சியர் பிரகாஷ் பேரணியை தொடக்கி வைத்தார். துறையூர் நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களித்தல்,  பணம், பரிசு பெறாமல் வாக்களித்தல் உள்ளிட்ட தேர்தல் மற்றும் வாக்காளர் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பாலக்கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியரகம் வரை சென்றனர்.  பேரணியில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஆனந்த், மண்டலத் துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி, நடராஜ் உள்ளிட்ட வருவாய் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஜெமீன்தார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT