திருச்சி

திருவானைக்கா கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

DIN

திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை இக் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் இந்த யாகம் நடைபெற்றது. முன்னதாக யானை அகிலாவுக்கு கஜபூஜை, தொடர்ந்து ருத்ராபிஷேகம், யாகம் நடந்தது. இதில் சுந்தரமூர்த்தி நாயனாரின் 7 ஆம் திருமுறையும், திருஞான சம்பந்தர் இயற்றிய 1 ஆம் திருமுறை மழைப் பதிகமும் ஓதுவரால் பாடப்பட்டது. அமிர்தவர்ஷினி,மேக வர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ராகம், நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. வேத மந்திரங்களைப் படித்தனர். சுமார் 3 மணி நேரம் யாகம் நடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT