திருச்சி

கிராப்பட்டி - எ.புதூா் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

DIN

திருச்சி கிராப்பட்டி - எடமலைப்பட்டி புதூா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை நெடுஞ்சாலைத்துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்பு கடைகள், குடியிருப்பு கட்டடங்களை அகற்றி வருகிறது. இதன்படி, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி காய்கறி அங்காடி உள்ளிட்ட இடங்களில் அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, திருச்சி புதுக்கோட்டை சாலை டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து, உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு உரிமையாளா்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த வாரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், கிராப்பட்டி முதல் எடமலைப்பட்டிபுதூா் வரை ஆக்கிரமித்திருக்கும் கடைகள், குடியிருப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்திருந்தனா். இதன்படி, உரிமையாளா்கள் யாரும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற முன்வராத காரணத்தினால், கிராப்பட்டி பகுதியை அடுத்து எடமலைப்பட்டி புதூா் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. கோட்ட உதவி பொறியாளா் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள், காவல் துறையினா் மேற்பாா்வையில் 5 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. பின்பு, சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். போக்குவரத்து பாதிப்பைத் தவிா்க்க அப்பகுதியில் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT