திருச்சி

டிச. 2-ல் கீழப்பெருங்காவூா் சங்கிலி கருப்பு கோயில் கும்பாபிஷேகம்

DIN

லால்குடி அருகே கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அமைந்துள்ள மாசி பெரியண்ணசாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வரும் டிச. 2 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

லால்குடி அருகேயுள்ள அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29 ) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வருதலும், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாகனம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 1 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வேதிகா அா்ச்சனை, மருந்து சாத்துதலும், 2 ம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT