திருச்சி

திருச்சியில் தொடரும் சாரல் மழை

DIN

திருச்சியில் தொடர்ந்து  சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாளாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து தினமும் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடுமையான வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை  நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, வெப்பத்தை தணிக்கும் வகையில் இருக்கும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக நேரம் மழை பெய்யவில்லை என்றாலும் குறிப்பிட்ட நேரம் மழை பெய்கிறது. ஆனால் அதற்கே மாநகரிலுள்ள சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல்  பெயர்ந்து,பல இடங்கள் குழிகளாகக் காணப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மேல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டு காணப்பட்ட நிலையில் அதன் பின்னர் மழை பெய்தது. இது  சாரல் மழையாகவே இருந்தது.
கொசுக்கள் பெருக்கம்:  நகர்ப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால், கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது.  எனவே, மழைநீர் தேங்காதவாறு சாலைகளைச் சீரமைத்தும், தேங்கிய மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாதவாறு மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT