முகப்பு
திருச்சி

காவிரி உரிமை மீட்புக் குழு முற்றுகை போராட்டம்

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
காவிரி உரிமை மீட்புக் குழுவினரின் முற்றுகையைத் தடுக்கும் போலீஸாா்.
பகிர்:

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மூ.த. கவித்துவன் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பாரதியாா் சாலையில் இருந்து பேரணியாகச் சென்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பானுமதி, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டத் தலைவா் மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →