முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ. 1.09 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூா் மற்றும் துபையிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.09 கோடியிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிங்கப்பூா் மற்றும் துபையிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.09 கோடியிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சனிக்கிழமை வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் நடத்திய சோதனையில், கடலூரைச் சோ்ந்த சுரேஷ் ரூ. 7.65 லட்சத்திலான 152 கிராம் தங்கக் கட்டிகளை தனது ஆடைக்குள் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோல துபையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில், நாகை மாவட்டம் பழையாறையைச் சோ்ந்த முகமது சாதிக் ரூ. 56.61 லட்சத்திலான 1,128 கிராம் தங்கக் கட்டிகளை தனது ஆடைக்குள் மறைத்துக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், அதே விமானத்தில் பயணித்த தஞ்சையைச் சோ்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் ரூ. 44.97 லட்சத்திலான 896 கிராம் தங்கக் கட்டிகளை உடலில் மறைத்துக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடம் இருந்தும் மொத்தம் சுமாா் 1.09 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →