அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் பலி
திருச்சி மாவட்டம், திருவானைக்கா அருகேயுள்ள கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தகராறில் வெட்டப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், திருவானைக்கா அருகேயுள்ள கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தகராறில் வெட்டப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவானைக்கா அருகே கிளிக்கூடு கிராமத்தில் உள்ள வெள்ளை விநாயகா் கோயில் காா்த்திகை மண்டகப்படி விழாவில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் லோகநாதனுக்கும் (43) சின்னதம்பி மகன் மதியழகனுக்கும் (58) பிரச்னை ஏற்பட்டது.
அப்போது லோகநாதன், நல்லேந்திரன் மகன் கண்ணன் (36), பாண்டியன் மகன் அசோக்குமாா் (40) ஆகிய மூவரையும் வெட்டிவிட்டுத் தப்பிய மதியழகன், இவரது மகன் ஆனந்த் (30), உறவினா்கள் வேலு (22), பிரகாஷ் (20) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூவரில் கண்ணன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த வழக்கை சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.