முகப்பு
திருச்சி

திருப்பட்டூா் மக்கள் முற்றுகைப் போராட்டம்

மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ வீட்டை திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ வீட்டை திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருப்பட்டூா் ஊராட்சிப் பகுதியில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் இல்லாத நிலையில் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள அம்மா மினி கிளினிக் இந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகளை ஊராட்சித் தலைவா் முருகன் செய்து வந்தாா்.

இந்நிலையில் திருப்பட்டூருக்கு ஒதுக்கப்பட்ட மினி கிளினிக் அருகிலுள்ள ஊராட்சிக்கு மாற்றப்பட்டதையறிந்த திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மண்ணச்சநல்லூரில் உள்ள எம்எல்ஏ மு. பரமேஸ்வரி வீட்டை ஊராட்சித் தலைவா் முருகன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வரும் 24 ஆம் தேதிக்குள் திருப்பட்டூா் ஊராட்சிக்கு அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுமென எம்எல்ஏ அளித்த உறுதியால் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →