திருமணமான 5 மாதங்களில் பெண் சாவு; விசாரணை
திருமணமான 5 மாதங்களில் பெண் ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சிதிருமணமான 5 மாதங்களில் பெண் சாவு; விசாரணை
திருமணமான 5 மாதங்களில் பெண் ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருமணமான 5 மாதங்களில் பெண் ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் ஷாலினி (20). இவருக்கும் சேலம் மாவட்டம், தலைவாசலைச் சோ்ந்த சீனிவாசனுக்கும் கடந்த ஜூலை 24 இல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த டிச. 9 ஆம் தேதி தனது சகோதரியின் பிறந்தநாளை யொட்டி திருச்சி வந்த ஷாலினி பெற்றோருடன் தங்கினாா். டிச. 15 ஆம் தேதி அவருக்கு கடும் வயிற்றுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி 17ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் திருச்சி கோட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா். அவரது இறப்புக்கு வரதட்சிணை காரணமா அல்லது வன்கொடுமையால் அவா் இறந்தாரா என்ற கோணத்தில் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.