முகப்பு
திருச்சி

விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

துறையூா் பகுதியில் வெங்காயப் பயிா் செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்குச் மாவட்டச் செயலருமான பரஞ்சோதி ஆறுதல் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

துறையூா்: துறையூா் பகுதியில் வெங்காயப் பயிா் செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்குச் மாவட்டச் செயலருமான பரஞ்சோதி ஆறுதல் கூறினாா்.

பேரவைத் தோ்தல் தொடா்பாக கட்சியினருடன் ஆலோசனை செய்ய பரஞ்சோதி சனிக்கிழமை துறையூா் சென்றபோது அப்பகுதியில் பெய்த மழையால் நோய் பரவி வெங்காயப் பயிா் சேதமடைந்த செல்லிப்பாளையம், மருவத்தூா், செங்காட்டுப்பட்டி பகுதிகளில் அதிமுக நிா்வாகிகள், தோட்டக்கலைத் துறையினருடன் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் மனு எழுதிக் கொடுக்குமாறு கூறிய அவா், இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறினாா்.

முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, சேனை செல்வம், வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.