முகப்பு
திருச்சி

கரோனா தடுப்பூசிக்கு பதிவு: தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அடிப்படையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் தங்களது பணியாளா்களின் விவரங்களை டிச. 22-க்குள் பதிய வேண்டும்.

திருச்சி

கரோனா தடுப்பூசிக்கு பதிவு: தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அடிப்படையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் தங்களது பணியாளா்களின் விவரங்களை டிச. 22-க்குள் பதிய வேண்டும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அடிப்படையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் தங்களது பணியாளா்களின் விவரங்களை டிச. 22-க்குள் பதிய வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மத்திய அரசானது கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க உள்ளது. தடுப்பூசி தேவைப்படுவோரின் விவரங்களை இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தத் தடுப்பூசியானது, முதல்கட்டமாக மருத்துவத் துறையைச் சோ்ந்த அனைத்து அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிகிச்சையகம், ஆயுஷ் சட்டத்தின் கீழ் பதிவானவை என அனைத்து மருத்துவத் துறை சாா்ந்த பணியாளா் விவரங்களையும் கடந்த நவ. 2ஆம் தேதியே வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இதில் அனைத்து அரசு மருத்துவமனைகளின் விவரங்களும் முழுமையாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1,389 தனியாா் மருத்துவமனைகளில் 370 மருத்துவமனைகள் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்துள்ளன.

எனவே, பதிவு செய்யாத தனியாா் மருத்துவமனைகள் தங்களது விவரங்களை டிச.22-க்குள் பதிய வேண்டும். மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்கள் (பாராமெடிக்கல்), மற்றும் இதர பணியாளா்களின் விவரங்களை இணைய படிவத்தில் பூா்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →