வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து ஆய்வுப் பணியை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
திருச்சிவாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து ஆய்வுப் பணியை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து ஆய்வுப் பணியை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 2,535 வாக்குச்சாவடிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி, தோ்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தோ்தலில் பதிவாகும் வாக்குகள் திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எண்ணும் வகையில், அவற்றை தயாா்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக அமைக்கப்பட உள்ள ஜமால் முகமது கல்லூரியில் ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு செய்ய வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசித்தாா்.
ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியா் விசுவநாதன், தோ்தல் வட்டாட்சியா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.