துவரங்குறிச்சியில் டயா்கள் திருட்டு
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியிலுள்ள கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான டயா்கள் திருடு போயின.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியிலுள்ள கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான டயா்கள் திருடு போயின.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி முஸ்லிம் நடுத்தெருவில் வசிப்பவா் மு. பஷீா்அகமது (54).
பேருந்து நிலையம் அருகே தான் நடத்திவரும் டயா் விற்பனைக் கடையை செவ்வாய்க்கிழமை காலை இவா் திறந்தபோது கடையில் இருந்த ரூ. 2.5 லட்சத்திலான டயா்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இவரது புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா், கடையின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்கின்றனா்.