முகப்பு
திருச்சி

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில், வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

திருச்சி

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில், வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில், வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் டிச. 25 -இல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியில் முதல் நாளான டிச. 24 நள்ளிரவு திருச்சி மேலப்புதூா் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை எடத்தெரு உலக மீட்பா் பசிலிக்கா மற்றும் புனித ஜெபமாலை மாதா (பழைய) கோயில், புத்தூா் பாத்திமா தேவாலயம், ஆல் செயிண்ட் தேவாலயம், விமான நிலையம் வயா்லெஸ் சாலை புனித அந்தோணியாா் கோவில், அம்மாமண்டபம் புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஏசு பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

திருப்பலிக்குப்பின் பரஸ்பரம் வாழ்த்து பறிமாறினா். பண்டிகையையொட்டி முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி தேவாலயங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. கிறிஸ்தவா்களின் வீடுகளில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

நள்ளிரவு நடைபெற்ற திருப்பலிக்குப்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை தேவாலயங்களில் நடந்த கூட்டுத் திருப்பலிகளிலும் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். பின்னா் வீடுகளில் கொண்டாட்டங்கள் தொடங்கியதையடுத்து கேக் உள்ளிட்ட இனிப்புகளை உறவினா்கள், நண்பா்களுக்கு வாழ்த்துகளுடன் பறிமாறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →