திருச்சி

இலவச வீட்டு மனை கோரி பெண்கள் மனு

DIN

இலவச வீட்டுமனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த தாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படுவதால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி 7 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் ஏழை, எளியோருக்கு இலவச வீடு, வீட்டுமனை வழங்க அறிவுறுத்தியிருப்பதால் சேதுராப்பட்டி, நவல்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT