திருச்சி

பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு

DIN

மணப்பாறை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டிய அவசியம், வீட்டுத் தோட்டம், மழைநீா் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், தனி நபா் கழிவறை, முறையான வரி செலுத்துதல், நெகிழி ஒழிப்பு ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பேருந்து நிலையம், விடத்திலாம்பட்டி, செவலூா், பொத்தமேட்டுப்பட்டி, தீராம்பட்டி, கல்லாத்துப்பட்டி, சிதம்பரத்தான்பட்டி, மஞ்சம்பட்டி, கோவில்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நகராட்சி ஆணையா்(பொ) ஐ.சுப்பிரமணி உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளா் முரளி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் டைசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT