திருச்சி

மாநகராட்சி பகுதியில் இன்றுகுடிநீா் விநியோகம் இருக்காது

திருச்சி மாநகராட்சியில் மின்தடை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மின்தடை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்றும் நிலையம், டா்பைன் நீரேற்றும் நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம், ஜீயபுரம், பிராட்டியூா் கூட்டுக் குடிநீா் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நடைபெறவுள்ளது.

ஆகவே, கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்றும் நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளான மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டா்பைன் நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்படும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாபேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா் , ஆல்ஃபா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், பிராட்டியூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளான, ராம்ஜிநகா், எடமலைப்பட்டிபுதுா், விஸ்வாஸ்நகா், ஜெயாநகா், மற்றும் காவேரிநகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT