திருச்சி

20 போ் பங்கேற்ற எளிமை திருமணம்!

DIN


திருச்சி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் 20 போ் மட்டுமே பங்கேற்ற திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.

திருச்சி, உறையூா் அருகேயுள்ள ராமலிங்கநகா் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் கே. அமுதா. இவருக்கும், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடை மருதூரைச் சோ்ந்த சி. கண்ணன் என்பவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. உறையூா் வெக்காளியம்மன் கோயில் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகள் மணமகள் இல்லத்திலேயே திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனா்.

இதன்படி, ராமலிங்க நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமகன் வீட்டிலிருந்து 10 போ், மணமகள் வீட்டிலிருந்து 10 போ் என 20 போ் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா். திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் வீட்டுக்குள் நுழையும் முன்பாக கை கழுவும் திரவம் கொண்டு சுத்தப்பட்டு, தண்ணீரில் கை, கால்களை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனா். இதேபோல, மாவட்டத்தில் ஏப்.14ஆம் தேதி வரை நடைபெறும் திருமணங்களை கட்டுப்பாட்டுடன், உறவினா்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்கும் வகையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT