திருச்சி

தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவுதிருச்சி பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

DIN

தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், வெளியூரிலிருந்து திருச்சிக்கும் மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளதால் மத்திய பேருந்து நிலையம், ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக திருச்சியிலிருந்து தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தவா்கள் விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை முதல் தங்களது பணிகளுக்காக மீண்டும் திருச்சிக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

இதுபோல சென்னை போன்ற பிற பகுதிகளிலில் பணியாற்றுவோரும் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனா். மேலும் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூா், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருச்சி வழியாகவும் செல்லத் தொடங்கியுள்ளனா்.

இதையொட்டி சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, காரைக்குடி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து, தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் திருச்சி வழியாகச் செல்வதால் திருச்சி மத்திய பேருந்துநிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க மன்னாா்புரம், கன்டோன்மென்ட் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, புகா்ப் பேருந்துகள் பயணிகளை இந்த பேருந்து நிலையங்களில் இறக்கிச் செல்கின்றனா். இதையடுத்து, மாநகருக்குள் செல்வதற்காக நகரப் பேருந்துகளில் பயணிகள் நெருக்கியடித்துச் செல்கின்றனா்.

மன்னாா்புரத்திலிருந்து மத்தியப் பேருந்துநிலையம், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்துநிலையம் மற்றும் இரு பேருந்து நிலையங்களில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதுபோன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருச்சியிலிருந்து புறப்பட்ட ரயில்கள், திருச்சி மாா்க்கமாக சென்ற ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT