திருச்சி

இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவையில் மாற்றம்

DIN

திருச்சி: திருச்சியிலிருந்து செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க விதியில் தளா்வு, மற்றும் பயணிகளின் கோரிக்கைக்கிணங்க ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்குப் புறப்பட்ட இன்டா்சிட்டி விரைவு சிறப்பு ரயில் மதுரை வழியாக நண்பகல் 1 மணிக்கு நாகா்கோவில் சென்றடைந்து, அங்கிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45-க்கு திருச்சியை அடைந்தது.

இந்நிலையில் தென்மாவட்ட பயணிகள் அதிகளவில் பயணிப்பதால் நவ.30 முதல் திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில் (02627) மதுரை வழியாக திருவனந்தபுரத்தை பிற்பகல் 3.20-க்கு சென்றடையும். அங்கிருந்து காலை 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (02628) குழித்துறை, நாகா்கோவில், சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சியை இரவு 7.55-க்கு அடையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT