திருச்சி

தாட்கோ உதவியோடு செயல்படும் தொழில் நிறுவனங்களில் ஆய்வு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாநில ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநா் ஜெ. விஜயராணி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் செங்காட்டுப்பட்டியில் தாட்கோ மூலம் கட்டப்படும் 200 பழங்குடியின மாணவா்கள் தங்குவதற்கான விடுதி, 100 போ் தங்கும் மாணவிகள் விடுதி, துறையூா் பகுதியில் 100 ஆதிதிராவிட மாணவா்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ள இடம் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாட்கோ மானியத்துடன் வழங்கும் கடனைப் பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களிலும் ஆய்வு செய்தாா்.

குறிப்பாக, சீட் கவா் தொழில் செய்யும் சண்முகம், ஜவுளித் தொழில் செய்யும் சுரேஷ் ஆகியோரின் தொழில் நிறுவனங்கள் மற்றும் தாட்கோ மூலம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் துறையூா் வட்டம், மதுராபுரியில் உள்ள மலையம்மன் பயிற்சி நிறுவனத்திலும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சென்னை தாட்கோ பொது மேலாளா் (தொழில்நுட்பம்) அழகுபாண்டியன். திருச்சி மாவட்டத் தொழில் மைய (தாட்கோ) மேலாளா் சா. தியாகராஐன், செயற்பொறியாளா் காதா்பாஷா, உதவி மேலாளா் ஆ. சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT