திருச்சி

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் அரசின் முயற்சியைக் கண்டித்தும், மின்வாரிய நிா்வாகத்தில் தொழிலாளா் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

கூட்டு நடவடிக்கை குழு திருச்சி பெருநகா் வட்டத்தின் சாா்பில் மன்னாா்புரம் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா்.

கரோனாவால் உயிரிழந்த மின் ஊழியா்களுக்கு இதர துறையினருக்கு வழங்குவதைப் போன்று ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோா்சிங் என்ற முறையில் தனியாா்மயமாக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 30 ஆயிரம் காலியிடங்களை உடனடியாக பூா்த்தி செய்ய வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகளை ரத்து செய்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் பணிக்கு வர முடியாத நாள்களை சிறப்பு விடுப்பு நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மின்வாரிய ஊழியா்கள், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து மத்திய சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT