திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 1.60 லட்சம் பறிமுதல்
திருவெறும்பூா் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ரூ. 1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெறும்பூா் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ரூ. 1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட குண்டூா் பகுதியில், மாவட்டத் தொழில் மைய அலுவலா் கம்பன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் திருவெறும்பூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரில் ரூ. 1.60 லட்சம் இருந்தது தெரியவந்தது.
காரில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தெருவைச் சோ்ந்த நீதிராஜனிடம் (55) விசாரித்தபோது அவா் திருவெறும்பூா் பகுதியில் மதுக்கூடம் வைத்திருப்பதும் அதில் வசூலான தொகையே பிடிபட்டதும் தெரியவந்தது.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, திருவெறும்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வட்டாட்சியருமான செல்வகணேசனிடம் ஒப்படைத்தனா்.