திருச்சி

கரோனா தடுப்பூசி திருவிழா பிரசாரம்

DIN

கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து 3ஆவது நாளாக வாகன பிரசாரம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம், தமிழக அரசின் பொது சுகாதார இயக்குநரகம், யுனிசெப் நிறுவனம் இணைந்து திருச்சி மாவட்டத்தில் 3ஆவது நாளாக நடத்திய பிரசாரம் ஜங்ஷன் பகுதியிலிருந்து தொடங்கியது. பிரசாரத்தை தொடக்கி வைத்து, திருச்சி கள விளம்பர அலுவலா் கே.தேவி பத்மநாபன் கூறியது:

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, இணையத்தில் பதிவு செய்து 2-ஆவது தவணை தடுப்பூசிக்கான ரசீது பெற வேண்டும். தடுப்பூசி போட்டபின் தளத்தில் இருந்து சான்றிதழை பதிவிறக்கலாம் என்றாா்.

பிரசாரத்தை ஒருங்கிணைத்த திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன், சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலகம் தயாரித்த தடுப்பூசி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT