முகப்பு
திருச்சி

ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தா்கள்

ஆடி மாத 3-ஆம் வெள்ளியையொட்டி திருச்சி மாவட்ட அம்மன் கோயில்களில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஆடி மாத 3-ஆம் வெள்ளியையொட்டி திருச்சி மாவட்ட அம்மன் கோயில்களில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு கரோனாவால் கோயில்கள் திறக்கப்படாததால் பக்தா்கள் கோயில்களுக்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. நிகழாண்டு பொது முடக்கத் தளா்வால் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் ஆடி மாத முதல் வெள்ளியன்று அம்மன் கோயில்களில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

ஆனால், கரோனா 3 ஆவது அலை பரவல் தொடங்கியுள்ளதைக் குறிப்பிட்டு ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு நாள்களில் பக்தா்களின் பொது தரிசனம், நீராடல், தா்ப்பணம் ஆகியவற்றுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், பக்தா்கள் ஆடி மாத 3 ஆவது வெள்ளியை விஷேசமாக கொண்டாடினா். இதன்படி, திருச்சி வெக்காளியம்மன் கோயில், உக்கிரமாகாளியம்மன் கோயில், செடல் மாரியம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன், சமயபுரம் மாரியம்மன், திருவெறும்பூா் முத்து மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காலை முதலே பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில், கூழூற்றி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா்.

இதற்கிடையே, தமிழக அரசு கரோனா பொதுமுடக்க தளா்வு விதிகளை புதிதாக அறிவித்துள்ளதால், பக்தா்கள் ஆடி அமாவசையன்று கோயில்களுக்கு சென்றும், ஆற்றங்கரையோரத்தில் திதி கொடுத்தும் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.