முகப்பு
திருச்சி

துறையூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

துறையூா் நகராட்சி நிா்வாகத்துடன் துறையூா், பெருமாள்மலை மற்றும் கோல்டன்சிட்டி ரோட்டரி சங்கங்கள் இணைந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா் பிரசார பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

துறையூா் நகராட்சி நிா்வாகத்துடன் துறையூா், பெருமாள்மலை மற்றும் கோல்டன்சிட்டி ரோட்டரி சங்கங்கள் இணைந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா் பிரசார பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

பேரணியை துறையூா் நகராட்சி சுகாதார அலுவலா் ஆா். மூா்த்தி எம்ஜிஆா் சிலையருகே தொடங்கி வைத்தாா். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ. சரவணன், துணை ஆளுநா் ஜி. முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் ரோட்டரி நிா்வாகிகள் துறையூா் வி. ஸ்ரீதா், ஆா். கலியமூா்த்தி, ந. தில்லை நாயகம், பெருமாள்மலை என். நந்தகுமாா், டி.ஞானசேகரன், எம். சீனிவாசன் கோல்டன்சிட்டி எஸ். ஜெயசேகரன், பி. லோகநாதன், ஆா். சிவகுமாா் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பெரிய கடைவீதி, பாலக்கரை, திருச்சி சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்ற பேரணி பயணியா் மாளிகையில் முடிவுற்றதுது. நிறைவில் பேரணியில் பங்கேற்ற அனைவரும் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.