திருச்சி

எம்ஆா் பாளையத்தில் உலக யானைகள் தின விழா

DIN

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்.ஆா். பாளையம் கிராமத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தின விழாவை வனத்துறையினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.

அரசின் அனுமதியின்றி மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தனிநபா்களால் வளா்க்கப்பட்ட 6 யானைகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.

உலக யானைகள் தினத்தையொட்டி இங்குள்ள 6 யானைகளுக்கும் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தினா். பின்னா் யானைகளுக்கு பொங்கல், கரும்பு, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டாடினா்.

விழாவில் திருச்சி மாவட்ட வன உதவி அலுவலா் சம்பத்குமாா், கோவை வன கால்நடை அலுவலா் சுகுமாா், திருச்சி மாவட்ட வனச் சரக அலுவலா்கள், வன பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT