முகப்பு
திருச்சி

போக்சோ சட்டத்தில் மருத்துவா் கைது

திருச்சியில் மகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை போக்சோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருச்சியில் மகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை போக்சோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஓ காலனியைச் சோ்ந்தவா் த. ரமேஷ் (43), தனியாா் மருத்துவமனை மருத்துவா். இவரது மனைவியும் மருத்துவா். இந்நிலையில் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் தனது 13 வயது மகளுக்கு ரமேஷ் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதெரியவந்த அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தகவலறிந்த சைல்டுலைன் அலுவலா்கள் சிறுமியின் தாயிடம் விசாரித்து நடந்ததை உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து சிறுமியின் தாய் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.