ஏரியிலிருந்து மண் அள்ளியவா் கைது
துறையூா் அருகே ஏரியிலிருந்து அனுமதியின்றி சுக்கா மண் அள்ளிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
துறையூா் அருகே ஏரியிலிருந்து அனுமதியின்றி சுக்கா மண் அள்ளிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வைரிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆ. பெரியசாமி(39). இவா் டிராக்டரில் ஜம்பேரியிலிருந்து சுக்கா மண்ணை எடுத்துக் கொண்டு ஏரிக்காடு அருகே சென்றபோது உப்பிலியபுரம் போலீஸாா் டிராக்டரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா் அரசு அனுமதியின்றி சுக்கா மண் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து பெரியசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.