முகப்பு
திருச்சி

பலாத்கார வழக்கில் இலங்கை அகதி கைது

 திருச்சி அருகே பலாத்கார வழக்கில் இலங்கை அகதியை திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 திருச்சி அருகே பலாத்கார வழக்கில் இலங்கை அகதியை திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் டோமினிக் மகள் விசித்ரா(26). பொறியியல் பட்டதாரியான இவா் கடவுச்சீட்டு பெற முயற்சித்தாா். இதையறிந்த துவாக்குடி சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்த இலங்கை அகதியான கி. சிறுத்தையான்பரன் (எ) பாபு (42)கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாகக் கூறி விசித்ராவை சென்னைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.