முகப்பு
திருச்சி

தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு: தனுஷ்கோடிக்கு சைக்கிள் பேரணி

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி திருச்சியில் இருந்து தனுஷ்கோடிக்கு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி திருச்சியில் இருந்து தனுஷ்கோடிக்கு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

செப். 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்கொலை தடுக்கப்படக் கூடியதே என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இந்த நாளின் நோக்கம்.

அந்த வகையில் ஆத்மா மனநல மையம் மற்றும் தென் மண்டல இந்திய மனநல சங்கம் இணைந்து விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

திருச்சியிலிருந்து காரைக்குடி, தொண்டி வழியாக ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை 600 கி.மீ. வரையிலான சைக்கிள் பேரணியில் தமிழகம், பாண்டிச்சேரி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 182 போ் பங்கேற்றனா்.

வெள்ளிக்கிழமை தொடங்கி 29ம் தேதி வரை 40 மணிநேரம் நடைபெறும் சைக்கிள் பேரணியில் தனுஷ்கோடி வரை சென்று மீண்டும் காரைக்குடி புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடைவா். மனநலம் காக்க விளையாட்டு அவசியம். அதனால், அனைவரையும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த சைக்கிள் ஓட்டம் நடைபெறுவதாக மனநல மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.