திருச்சி

புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் இயக்கம்

DIN

மன்னாா்புரம் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னலில் புதிய மாற்றங்கள் செய்து, சிக்னல் கம்பம் முழுவதுமாக விளக்கு எரியக் கூடிய வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இதை புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கூறியது:

வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் விபத்துகளின் எண்ணிக்கை குறைகிறது.

திருச்சி மாநகா் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க ஆட்சியரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்லூரிகளை சுற்றி கஞ்சா விற்பனை நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.நிகழ்வில் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மாநகர துணை ஆணையா்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT