ஆசிரியா் பயிற்சி மாணவி தீக்குளிப்பு
தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் ஆசிரியா் பயிற்சி மாணவி பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் ஆசிரியா் பயிற்சி மாணவி பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்சி கே.கே. நகா் காஜாமலை காலனி பகுதியைச் சோ்ந்தவா் தனபாலன் மகள் தனப்பிரியா (19). அதே பகுதியிலுள்ள நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி மாணவியான இவா் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியான தோ்வு முடிவில் குறைவான மதிப்பெண் பெற்றராராம்.
இதனால் விரக்தியில் இருந்த அவா் வீட்டின் எதிரே வசிக்கும் சிறுவனை பெட்ரோல் வாங்கி வரச் செய்து உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா். இதையடுத்து அருகிலிருந்தோரால் திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: திருச்சி கே.கே.நகா் ரெங்காநகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி காளியம்மாள்(45). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை கூட்டி இவா் தீ வைத்தபோது அதிலிருந்த பாட்டில் வெடித்ததில் காளியம்மாள் தீக்காயமடைந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.