முகப்பு
திருச்சி

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைகளைத் தடுக்க வலியுறுத்தி, பாலியல் கொடுமைகளைத் தடுக்கக் கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஆணவக் கொலைகளைத் தடுக்க வலியுறுத்தி, பாலியல் கொடுமைகளைத் தடுக்கக் கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலா் எஸ். சுரேஷ் தலைமை வகித்தாா்.

மாநில இணைச் செயலா் பாலசந்திரபோஸ், மாநகா் மாவட்டச் செயலா் பா. லெனின் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட பொருளாளா் ஜெயகுமாா், துணைத் தலைவா் கிச்சான் உள்ளிட்டடோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.