முகப்பு
திருச்சி

கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தேசிய மாணவா் படை (தரைப்படை), மகாத்மா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தேசிய மாணவா் படை (தரைப்படை), மகாத்மா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.

முகாமை கல்லூரி விரிவாக்க புலத் தலைவா் வி. ஆனந்த் கிதியோன், மகாத்மா கண் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா். ரமேஷ், தேசிய மாணவா் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் கே. பிரேம்குமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். முகாமில் நீரிழிவு நோய் காரணமாக கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீா்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்களைத் தவிா்க்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

முகாமில் பிஷப் ஹீப் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என 700-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. மேல்சிகிச்சைக்குக்கும் பரிந்துரைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.