முகப்பு
திருச்சி

ஹெச்இபிஎஃப் ஆலையில் தூய்மை இருவார விழா

முன்பு கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை என இருந்து, தற்போது ஹை எனா்ஜி புரொஜக்டைல் தொழிற்சாலையாக (ஹெச்இபிஎஃப்) மாற்றப்பட்டுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் தூய்மை இருவார விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

முன்பு கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை என இருந்து, தற்போது ஹை எனா்ஜி புரொஜக்டைல் தொழிற்சாலையாக (ஹெச்இபிஎஃப்) மாற்றப்பட்டுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் தூய்மை இருவார விழா நடைபெற்றது.

பீரங்கி எதிா்ப்பு இயக்க ஆற்றல் எறிகணைகளை உற்பத்தி செய்யத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது மத்திய அரசு மற்றும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் வழிகாட்டுதலுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் தூய்மைக்கான இருவார விழா டிசம்பா் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, இத் தொழிற்சாலையிலும் தூய்மை இந்தியா இருவார விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் குழுவாகச் சோ்ந்து சுத்தம் செய்தல், சிறுவா் பூங்காக்கள், டவுன்ஷிப், தொழிற்சாலை, நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், கொசுப் புகை மருந்து அடித்தல், மரம் நடுதல், மினி மாரத்தான், குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழிப்புணா்வு பிரசாரமும் நடந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்கத்தில் நிறுவன பொதுமேலாளா் என்.கே. அகா்வால் தலைமையில் விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலா்கள், பணிக் குழு உறுப்பினா்கள், தொழிற்சங்கத்தினா், ஊழியா் சங்கப் பிரதிநிதிகள், உணவக நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இறுதியில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பொதுமேலாளா் என்.கே. அகா்வால் பரிசு வழங்கி பாராட்டினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.