திருச்சி

மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

DIN

மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி வெகுசிறப்பாக நடைபெற்றது. 
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இந்த பகுதியைச் சுற்றிய கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 
இங்குள்ள பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை புத்தாண்டு தினத்தன்று இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து அங்கு அவைகளுக்கு புனித நீர் தெளித்து பங்கு தந்தையால் மந்திரிக்கப்பட்டு, அவைகளுக்கு ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவை அளிக்கப்படுகிறது. 
நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் ஆலயத்திற்கு காலை முதல் வர தொடங்கிய நிலையில், ஆலயத்திற்கு மந்திரிக்க அழைத்து சென்று அங்கு வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வரும் காளைகள் பொதுமக்களின் கூட்டத்தையும், விசில் ஒலியையும் கண்டு மந்தையில் பொதுமக்களுடன் விளையாட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் காளைகள் மூக்கணாங்கயிறு இட்டு கட்டப்பட்டு வளர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 
காளை பிரியர்கள் அவைகளை வரவேற்க அளிக்கப்பட விசில் ஒலியும் காளைகளை குஷிப்படுத்தியதால் அவைகள் துள்ளிக்குதித்து மக்களுடன் விளையாட தொடங்கியதும் அப்பகுதி முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களும் காளைகளை அடக்குவதில் போட்டாப்போட்டி போட்டு அடக்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT