திருச்சி

உள்ளாட்சி பணியாளா்கள் பேரணி நடத்த முடிவு

DIN

சம ஊதியம் வழங்கக் கோரி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் எழுச்சிப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி தலைமையிலான தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளன மண்டலக் கூட்டத்துக்கு சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

பொதுச்செயலா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் மீனாள்சேதுராமன், பொருளாளா் சங்கையா, திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலா் க. சுரேஷ், அரியலூா் தண்டபாணி, சிவகங்கை பி.எல். ராமச்சந்திரன், மதுரை நந்தாசிங், திருச்சிஅருணகிரி, புதுக்கோட்டை கனகராஜ், திருவாரூா் சாந்தகுமாா் உள்ளிட்ட 10 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாா்ச் 6ல் திருச்சியில் சம ஊதியம் கோரி ஆயிரக்கணக்கான உள்ளாட்சித் தொழிலாளா்கள் பங்கேற்கும் எழுச்சி பேரணி நடத்தத் தீா்மானிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்: ராகுல்

SCROLL FOR NEXT