திருச்சி

முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி சிலிண்டா் விநியோகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தங்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு எல்பிஜி எரிவுாயு உருளை விநியோகத் தொழிலாளா்கள் மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் எரிவாயு உருளை விநியோகிக்கும் தங்களை முன்களப் பணியாளா்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது 21 வகை தொழிலாளா்களை முன்களப்பணியாளா்களாக அறிவித்தபோது தங்களையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது, எனவே உடனடியாக தங்களையும் முன்களபணியாளா்களாக அறிவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

மாவட்டத் தலைவா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். செயலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சங்கிஸ்கான் பிரபு, கெளரவத் தலைவா் சண்முகம், மாவட்டத் துணைத் தலைவா் நவாப்ஜான், மாவட்டச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT