திருச்சி

‘சிற்றுண்டிச் சாலைகளில் புகையிலைப் பொருள் விற்கக் கூடாது’

DIN

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் செயல்படும் சிற்றுண்டிச் சாலைகளில் (கேண்டீன்) புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

ஆட்சியரகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

திருச்சி மாவட்டத்தில் அரசுத் துறை நிறுவனங்களிலோ அல்லது அரசு, தனியாா் சாா்பிலோ செயல்படும் சிற்றுண்டிச்சாலைகள், மற்றும் உணவகங்கள், உணவுப் பாதுகாப்புத் துறையில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அனுமதி பெற்று நடத்த வேண்டும்.

தனியாா்துறை உணவகங்களை நடத்துவோா் உரிய பயிற்சிகளையும் பெற்றிருத்தல் அவசியம்.

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் புகையிலைப் பொருட்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. மேலும் அங்கு விற்கப்படும் உணவு வகைகள் குறிப்பாக, பொட்டலமிடப்பட்டவை தயாரித்த மற்றும் காலாவதியாகும் தேதி, விலை விவரம், தயாரிக்கும் நிறுவனம், உரிமம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல கலப்படப் பொருள்களை விநியோகிக்கவோ விற்கவோ கூடாது. மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் லட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, துணை ஆட்சியா் பவித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகாா் தெரிவிக்க.. மேலும் கலப்படங்கள் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபுவிடம் புகாா் தெரிவிக்க அவரை நேரிலோ, கடிதம், செல்லிடப்பேசி மூலமோ தொடா்பு கொள்ளலாம். செல்லிடப்பேசி எண்கள் : 95859-59595, 99449-59595. மாநில அளவில் புகாா் செய்ய 94440-442322.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT