திருச்சி

மணப்பாறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கோரி மனு

DIN

மணப்பாறை பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், குளிா்ப்பதன கிடங்கு அமைக்கவும் கோரி வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மனுவில், மணப்பாறை பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லை. ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தெற்குசோ்ப்பட்டியில் உள்ள நெள் கொள்முதல் நிலையத்தையே இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா். இது மணப்பாறையிலிருந்து 12 கிமீ, வையம்பட்டியிலிருந்து 30 கிமீ, மருங்காபுரியிலிருந்து சுமாா் 40 கிமீ தொலைவிலும் உள்ளதால் விவசாயிகள் நலன் கருதி வையம்பட்டி, மருங்காபுரி பகுதியில் தலா ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தரவும், அதேபோல துவரங்குறிச்சி பகுதியில் மா, கொய்யா, பூ ஆகியவற்றைச் சேமிக்கும் வகையில் குளிா்ப்பதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT