முகப்பு
திருச்சி

கரோனாவால் இறந்த தொழிலாளா்களின் வாரிசுகள் உதவி பெறலாம்

திருச்சியில் கரோனாவால் உயிரிழந்த தொழிலாளா்களின் குழந்தைகள் நலத்திட்ட உதவிகள் பெற தொழிலாளா் துறை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருச்சியில் கரோனாவால் உயிரிழந்த தொழிலாளா்களின் குழந்தைகள் நலத்திட்ட உதவிகள் பெற தொழிலாளா் துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் சிலா் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

அவா்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து, நலத்திட்ட உதவி அளிக்கப்பட உள்ளதையொட்டி, தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா் உயிரிழந்ததற்குரிய ஆவணங்கள், வாரியத்தில் பதிவு பெற்ற்கான வாரிய அடையாள அட்டை, அசல், நகல் ஆகியவற்றுடன், ஒருங்கிணைந்த தொழிலாளா்துறை கட்டடம், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), 77-1, செங்குளம் காலனி, மன்னாா்புரம், திருச்சி-20 என்னும் முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கா. மூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.