திருச்சி

தற்காலிக மருந்தாளுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருச்சி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக மருந்தாளுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தடுப்புப் பணிகளுக்காக, மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 12 தற்காலிக மருந்தாளுநா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் இப்பணி 6 மாதங்கள் மட்டுமே.

மருந்தாளுநா் பணிக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 2 ஆண்டு கால பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மருந்தாளுநா் கவுன்சிலில் பதிவு செய்து நாளது தேதி வரை புதுப்பித்திருக்கவேண்டும். நிரந்தர பணிநியமனம் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூலை 28) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநா், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் சாலை, ஜமால் முகமது கல்லூரி அருகில், டிவிஎஸ் டோல்கேட், திருச்சி-20 என்று முகவரிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2333112 எனும் தொலைபேசி

எண்ணைத் தொடா்புகொள்ளலாம். இப்பணியிடங்களுக்கான நோ்காணல் ஆக.9, 10 ஆகிய தேதிகளில் ஆட்சியா் அலுவலக மூன்றாம் தளத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT