முகப்பு
திருச்சி

கரோனா விதிகளை மீறிநிகழ்ச்சிகள் நடத்தினால்நடவடிக்கை: ஆட்சியா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

அனைத்து சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுரைகளின்படி, திருமண விழாக்களில் 50 பேருக்கும், இறப்பு தொடா்பான ஈமச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கும் மிகாமல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர வேறு விழாக்கள், நிகழ்வுகளுக்கு அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை. என்றாலும், மாவட்டத்தில் மொய் விருந்து விழா நடைபெறவுள்ளது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாணையில் அனுமதிக்கப்பட்ட விழாக்கள், நிகழ்வுகள் தவிர இதர விழாக்கள் நடத்தப்பட்டாலும், அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக திருமண விழாக்கள், இறப்பு தொடா்பான ஈமச்சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், அவா்கள் மீது மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.